தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது


ADDED : ஜூலை 17, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பூக்கடை: மதுபோதையில், பேருந்து கண்ணாடியை உடைத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவான்மியூரை நோக்கி சென்ற தடம் எண்: ஏ1 பேருந்தை, சரவணன், 47, என்பவர் ஓட்டிச் சென்றார்.

நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு, பூங்கா நகர், ஈவ்னிங் பஜார் வழியாக பேருந்து சென்றபோது, சாலையில் வாலிபர் ஒருவர் தள்ளாடியபடி வந்துள்ளார்.

இதனால் ஓட்டுநர், வாலிபரை பார்த்து ஓரமாக நடந்து செல்ல கூறியுள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர், பேருந்து மீது கல் வீசினார். இதில், பேருந்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.

இது குறித்து விசாரித்த பூக்கடை போலீசார், பேருந்தின் மீது கல் வீசிய அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், 22, என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே நான்கு அடிதடி வழக்குகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us