/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாத்தாங்காடு ஸ்டீல் நிறுவனத்தில் ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது
/
சாத்தாங்காடு ஸ்டீல் நிறுவனத்தில் ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது
சாத்தாங்காடு ஸ்டீல் நிறுவனத்தில் ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது
சாத்தாங்காடு ஸ்டீல் நிறுவனத்தில் ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது
ADDED : மார் 01, 2025 01:14 AM
திருவொற்றியூர், சாத்தாங்காடு ஸ்டீல் நிறுவனத்தில், 3 கோடி ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மணலி சாத்தாங்காடில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்டீல் நிறுவனத்தில், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த நரசிம்மன், 49, என்பவர் அணுகி, வர்த்தகத்திற்கு உதவுவதாகவும், உதிரி பாகங்களை, மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்து தருவதாகவும் கூறினார்.
இதை நம்பிய அந்நிறுவனத்தினர், நரசிம்மன், அவரது கூட்டாளிகளிடம், இரண்டு ஆண்டுகளில், 2.32 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மட்டுமின்றி, ரொக்கமாக 70 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். பொருட்களை விற்பனை செய்ததற்கான பணத்தை தரவில்லை; வாங்கிய பணத்தையும் தராமல் நரசிம்மன் ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து, மோசடி நபர் மீது நடவடிக்கை கோரி, நிறுவன மேலாளர், ஆவடி கமிஷனர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலில் முக்கியமான நரசிம்மனை நேற்று கைது செய்தனர். விசாரணைக்குப்பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.