/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்கள் பாத்ரூமில் கேமரா வைத்தவர் கைது
/
பெண்கள் பாத்ரூமில் கேமரா வைத்தவர் கைது
ADDED : ஆக 18, 2024 12:20 AM

பாண்டி பஜார், வடபழனியை சேர்ந்த 26 வயது பெண், பாண்டி பஜாரில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம், கடையில் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூமிற்குள் சென்றார். அங்குள்ள ஜன்னலில் மறைவாக வீடியோ எடுப்பதற்காக மொபைல் போன் வைத்திருந்ததை பார்த்தார்.
அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது, வெளியே நின்றிருந்த நபர், மொபைல் போனை பறித்து சென்றார். இதுகுறித்து அப்பெண் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தி.நகரை சேர்ந்த மணிகண்டன், 33, அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பெயின்ட் அடிக்கும் பணிக்கு வந்ததும், அருகில் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூம் இருந்ததால், அதில் மொபைல் போனில் கேமரா ஆன் செய்து வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

