/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் செயின் பறிப்பு ஒருவர் கைது
/
பெண்ணிடம் செயின் பறிப்பு ஒருவர் கைது
UPDATED : ஜன 27, 2025 03:51 AM
ADDED : ஜன 27, 2025 03:29 AM

கோடம்பாக்கம்:கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அன்புகனி, 52; வீட்டு வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து, கோடம்பாக்கம், வரதராஜபேட்டை ஆரோக்கியசாமி தெரு சந்திப்பில் நடந்து சென்றார்.
அப்போது, மர்ம நபர் அவரது 3 சவரன் செயினை பறித்து சென்றார். அன்புகனி கூச்சலிடவே, செயினை கீழே வீசி விட்டு தப்பி சென்றார்.
அங்கிருந்தோர், அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். செயினையும் மீட்டனர். விசாரணையில், பிடிபட்டவர் துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், 23, என்பதும், வேளச்சேரியில் தங்கி தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

