/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நுாலகத்தில் 'சிசிடிவி' கேமரா திருடியவர் கைது
/
நுாலகத்தில் 'சிசிடிவி' கேமரா திருடியவர் கைது
ADDED : ஆக 02, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரு.வி.க.நகர், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில், சென்னை மாவட்ட கிளை நுாலகம் உள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் நுாலகத்தில் 23 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இயங்கி வந்தன.
இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி இரவு நுாலகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் இரண்டு திருடு போயின.
இதுகுறித்து திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில், கிளை நுாலகர் செந்தாமரை, 40 புகார் அளித்திருந்தார். பெரம்பூர் தீட்டித் தோட்டத்தை சேர்ந்த 'பிளேடு' கிஷோர், 24 என்பவர் கேமராக்களை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.