/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
24 மணி நேரமும் இயங்கும் மங்களம் நகர் மதுக்கடை
/
24 மணி நேரமும் இயங்கும் மங்களம் நகர் மதுக்கடை
ADDED : ஜூலை 19, 2024 12:31 AM

ஆவடி,
ஆவடி அடுத்த கோவில்பதாகை, கன்னடபாளையம், மங்களம் நகர் பிரதான சாலையில் அரசு மதுபான கடை உள்ளது.
அதன் சுற்றுவட்டாரத்தில் கோவில்பதாகை, கன்னடபாளையம், டிரினிட்டி அவென்யு, மங்களம் நகர், எம்.சி.பி நகர் மற்றும் 'கிறிஸ்ட்' காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
கோவில் பதாகை பிரதான சாலை ஒட்டி அமைந்துள்ள 'டாஸ்மாக்' கடை, 24 மணி நேரமும் செயல்படுகிறது. மதுக்கடை அருகே இடைவிடாமல் கூடுதல் விலைக்கு மதுபான விற்பனை நடந்து வருகிறது. நள்ளிரவுக்கு பிறகும், மதுக்கடை முன் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன.
இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள், மதுபான கடையை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
இப்பகுதியில் திரிவோர் போதை தலைக்கேறியதும், சாலையில் அமர்ந்து மது அருந்துவது, மின் விளக்குகளை அடித்து நொறுக்குவது வாடிக்கையாக நடக்கிறது.
எனவே, விதிமீறி இயங்கும் அரசு மதுபான கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைவலுத்துள்ளது.