/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணிமேகலை பிரசுரம் சர்வதேச புத்தக காட்சி
/
மணிமேகலை பிரசுரம் சர்வதேச புத்தக காட்சி
ADDED : மே 31, 2024 12:52 AM
சென்னை, கதை, நாவல், கட்டுரை, அறிவியல், தொழில், வணிகம், விளையாட்டு, முதலீடு என, வாழ்வியல் சார்ந்த அனைத்துத் தளங்களிலும், மணிமேகலை பிரசுரம், தம் படைப்புகளை 40 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது.
தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய ஒவ்வொரு நாட்டிலும், மணிமேகலை பிரசுரம் புத்தக காட்சியை நடத்த உள்ளது.
முதற்கட்டமாக ஜூன் 1 முதல் 5ம் தேதி வரை துபாய்; 7ல் இருந்து 11ம் தேதி வரை சுவிட்சர்லாந்து; 13ல் இருந்து 16ம் தேதி வரை பிரான்ஸ் என, மூன்று நாடுகளில், புத்தக காட்சியை நடத்துகிறது.
இதில், 'தினமலர் - வாரமலர்' அந்துமணியின் கேள்வி பதில்கள் - 8 பாகங்கள், பார்த்தது - கேட்டது - படித்தது 23 பாகங்கள் மற்றும் பயண நுால்கள் பற்றிய அறிமுக நிகழ்ச்சியும் சிறப்புற இடம் பெறும்.
விபரங்களுக்கு tamilvanan.com என்ற இணையத்திலும், 044 -- 2434 2926 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, மணிமேகலை பிரசுரம் தெரிவித்துள்ளது.