/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்
/
குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 24, 2024 12:25 AM

சென்னை, தேனாம்பேட்டை மண்டல குடிநீர் வாரிய ஊழியர்களுக்கென இரண்டு நாள் சிறப்பு மருத்துவ முகாம், ராயப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று துவங்கியது. முகாமில், 220 குடிநீர் வாரிய ஊழியர்கள் சிகிச்சை பெற்றனர்.
மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி கூறியதாவது:
மாநகராட்சி சார்பில் குடிநீர் வாரிய ஊழியர்களுக்கென ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
ராயப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்றும் நாளையும் நடக்கும் முகாமில், ஆஷா லதா தலைமையிலான ஐந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.