/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா கடத்தி மே.வங்க நபர்கள் கைது
/
கஞ்சா கடத்தி மே.வங்க நபர்கள் கைது
ADDED : ஜூலை 25, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், கடந்த 20ம் தேதி குலியா ரயிலில், பெரம்பூர் வந்திறங்கினர். ஓட்டேரி படேல் சாலை சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இவர்களிடம், ஓட்டேரி போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது 8 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் சிக்கின. அவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரிசிங் கார்வாம், 28, பிகாஷ் பக்தி, 20, ஹேமந்தாலயா, 22, லாப்லயா, 41, சக்திபடாலயா, 47, சஞ்சய் மாகி, 38, திலீப் சர்தார், 47, பக்துலயா, 26, ஆகிய எட்டு பேரை ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.