/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில் உரிம கட்டணம் மாற்ற வணிகர் சங்கம் கோரிக்கை
/
தொழில் உரிம கட்டணம் மாற்ற வணிகர் சங்கம் கோரிக்கை
ADDED : மார் 05, 2025 02:51 AM
சென்னை:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சவுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக உள்ளாட்சி துறை வாயிலாக வணிகம் செய்யும் வணிகர்களுக்கு, தொழில் உரிம கட்டணம் 625 ரூபாயாக இருந்தது. அதை ஐந்து மடங்கு உயர்த்தி, ஆண்டுக்கு 3,500 ரூபாய் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு மொத்தமாக செலுத்த சென்னை மாநகராட்சி அறிக்கை அனுப்பியது.
சிறு வணிகர்கள், பெரு வணிகர்கள் என இரு பிரிவுகளாக பிரித்து, பெரு வணிகர்களுக்கு ஆண்டுக்கு 2,000 ரூபாயும், சிறு வணிகர்களுக்கு 1,000 ரூபாயும், ஒரே முறையாக செலுத்தும் வகையில் தொழில் உரிமை கட்டணம் விதிக்க வேண்டும் என, உள்ளாட்சி துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையரை பலமுறை தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசினோம்.
அதன் அடிப்படையில், சிறு வணிகர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு, தொழில் உரிமம் கட்டணம் 1,200 ரூபாயாக குறைக்கப்பட்டது.
அதே போல, பெரு வணிகர்களுக்கு ஆண்டொன்றுக்கு தொழில் உரிம கட்டணமாக 2,000 ரூபாயாகவும், சிறு வணிகர்களுக்கு 1,000 ரூபாயாகவும் மாற்ற வேண்டும்.
இதை வணிகர் சங்க நிர்வாகிகள் வழங்கும் சான்றின் அடிப்படையில், சிறு வணிகர்கள், பெரு வணிகர்கள் என தரம் பிரித்து, மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.