/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்விக்கு அரசு முக்கியத்துவம் அமைச்சர் அன்பரசன் பேச்சு
/
கல்விக்கு அரசு முக்கியத்துவம் அமைச்சர் அன்பரசன் பேச்சு
கல்விக்கு அரசு முக்கியத்துவம் அமைச்சர் அன்பரசன் பேச்சு
கல்விக்கு அரசு முக்கியத்துவம் அமைச்சர் அன்பரசன் பேச்சு
ADDED : ஆக 19, 2024 02:32 AM

மடிப்பாக்கம்:மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவாரி சீனியர் செகண்டரி பள்ளி இணைந்து, இரு நாள் நடத்திய, அறிவியல், கலை மற்றும் கைவினைக் கண்காட்சி விழா, நேற்று நிறைவடைந்தது.
பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் வாசுதேவன், விருந்தினர்களை கவுரவித்து வரவேற்று பேசுகையில், ''பள்ளிகளில் சிறிய 'பிராஜக்ட்'களை செய்து பயிற்சி பெற்றால், பின்நாளில் பெரிய திட்டங்களை உருவாக்கலாம். மாணவர்களின் ஆர்வத்தை இதுபோன்ற கண்காட்சி துாண்டுகிறது,'' என்றார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, கடந்த பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுத்தொகை வழங்கிப் பேசியதாவது:
'ஸ்டாட்ர் அப்' நிறுவனங்கள் துவங்குவதில் தமிழகம் முதல் இடம் பிடித்துள்ளது.
படிக்கும்போது தொழில் துவங்கும் பயிற்சியை, 8.42 லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவத்திற்கு இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

