/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஸ்பென்சர்' சிக்னலில் மொபைல் போன் பறிப்பு
/
'ஸ்பென்சர்' சிக்னலில் மொபைல் போன் பறிப்பு
ADDED : ஆக 23, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஸ்பென்சர் சிக்னல் அருகே நடந்து சென்ற 'டோமினோஸ்' பீட்சா கடை ஊழியரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், மொபைல் போனை பறித்துச் சென்றுள்ளனர்.
ஆந்திரா மாநிலம், காக்கிநாடாவைச் சேர்ந்தவர் தீபக், 21. இவர், சென்னை, அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் உள்ள, 'டோமினோஸ்' பீட்சா சென்டரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை ஸ்பென்சர் சிக்னல் அருகே நடந்து சென்றார். அப்போது, ஸ்கூட்டரில் வந்த இருவர் அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர்.
இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

