ADDED : செப் 05, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ, 49; மத போதகர். நேற்று காலை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலில் நின்றுள்ளார்.
அவ்வழியாக வந்த மர்ம நபர், தன் மொபைல் போன் 'சார்ஜ்' இல்லாமல் 'சுவிட்ச் ஆப்' ஆகிவிட்டதாக கூறி, மேத்யூவிடம் மொபைல் போனை கேட்டு வாங்கியுள்ளார்.
போன் பேசுவது போல நடித்த மர்ம நபர், திடீரென தப்பிச் சென்றார்.
இதுகுறித்த புகாரின்படி, சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.