/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் போன் வெடித்து தொழிற்சாலையில் தீ விபத்து
/
மொபைல் போன் வெடித்து தொழிற்சாலையில் தீ விபத்து
ADDED : ஏப் 02, 2024 12:33 AM
குன்றத்துார், சோமங்கலம் அருகே, பர்னிச்சர் தொழிற்சாலையில் மொபைல்போன் வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது.
சோமங்கலம், எருமையூர் எரிகரை பகுதியில், தனியாருக்குச் சொந்தமான சிறிய அளவிலான தொழிற்சாலை இயங்குகிறது.
இங்கு நாற்காலி, பர்னிச்சர், சோபா செட் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இங்கு வடமாநில தொழிலாளர்கள், 6 பேர் தங்கி பணியாற்றுகின்றனர்.
நேற்று அதிகாலை 3:00 மணியளவில், இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர்.
தகவலின்படி வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், தொழிற்சாலையில் இருந்த பொருட்கள், 70 சதவீதம் எரிந்து நாசமாகின.
தொழிலாளர்கள் மொபைல்போனை நீண்ட நேரம் 'சார்ஜ்' போட்டு வைத்ததால், மொபைல்போன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக, சோமங்கலம் போலீசார் தெரிவித்தனர்.

