ADDED : மார் 25, 2024 12:38 AM
பல்லாவரம்:ஸ்ரீபெரும்புதுார் தொகுதி த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால் அறிமுக கூட்டம், குரோம்பேட்டையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், வேணுகோபால் பேசியதாவது:
பிரதமர் மோடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி தோல்வி பயத்தால் தமிழகத்திற்கு அடிக்கடி வருவதாக கூறுகிறார்.
இந்த தேர்தல், தி.மு.க.,விற்கு சாவு மணி அடிக்கிற தேர்தல். சொந்த கட்சிக்காரர்களுக்கே எதையும் செய்யாத டி.ஆர்.பாலு மக்களுக்காகவா செய்ய போகிறார்?
'மீண்டும் மோடி, மீண்டும் மோடி' என்ற கோஷம் இந்தியா முழுதும் கேட்கிறது. பா.ஜ.,வின் பலம், தி.மு.க., தனித்து போட்டியிட்டால் தெரியும். 400 எம்.பி.,கள் வெற்றி பெறுவோம் என பிரதமர் கூறியுள்ளார். உங்கள் ஆதரவோடு 401வது எம்.பி.யாக வெற்றி பெற்று லோக்சபா செல்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

