/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ்சில் பெண் பையை கிழித்து பணம் 'ஆட்டை'
/
பஸ்சில் பெண் பையை கிழித்து பணம் 'ஆட்டை'
ADDED : மே 09, 2024 12:20 AM
அயனாவரம்,
மாநகர பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கைப்பையை கிழித்து, பணம் மற்றும் மொபைல் போன் திருடிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லிவாக்கம், திருநகரைச் சேர்ந்தவர் ரேகா, 33. திருமணமாகி கணவருடன் கோவிலம்பாக்கத்தில் வசிக்கும் இவர், கோடை விடுமுறைக்காக, வில்லிவாக்கத்தில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை, ரேகாவிற்கு பல் வலி இருந்ததால், அயனாவரத்தில் உள்ள பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற, தடம் எண் '35' மாநகர பேருந்தில் பயணித்து, அயனாவரம் ஷயாணி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.
பல் மருத்துவரை பார்த்து விட்டு, பணம் கொடுக்க கைப்பையை திறந்த போது, அது கத்தியால் கிழிக்கப்பட்டு, பையில் இருந்த 3,000 ரூபாய் மற்றும் மொபைல்போன் திருடப்பட்டது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின்படி, அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.