/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஓ.பி.வைஷ்ணவ் கூடைப்பந்தில் சாம்பியன்
/
எம்.ஓ.பி.வைஷ்ணவ் கூடைப்பந்தில் சாம்பியன்
ADDED : ஆக 24, 2024 12:07 AM
சென்னை, சென்னை பல்கலையின் கல்லுாரிகள், 'ஏ' மற்றும் 'பி' என இரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருபாலருக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தனித்தனியாக நடக்கின்றன.
அந்த வகையில், 'ஏ' மண்டல பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி, செம்பாக்கம், நியூ பிரின்ஸ் கல்லுாரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
அதில், எம்.ஓ.பி., - எஸ்.ஆர்.எம்., - செல்லம்மாள், ஜேபாஸ், எம்.ஜி.ஆர்., ஜானகி உட்பட பல்வேறு கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதி போட்டியில், சென்னை எம்.ஓ.பி., மற்றும் எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன.
அதில், 23 - 9 என்ற அபார புள்ளிக் கணக்கில் எம்.ஓ.பி.வைஷ்ணவ் கல்லுாரி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.