/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டயர் வெடித்து கவிழ்ந்த கார் தாய், மகன் உயிர் தப்பினர்
/
டயர் வெடித்து கவிழ்ந்த கார் தாய், மகன் உயிர் தப்பினர்
டயர் வெடித்து கவிழ்ந்த கார் தாய், மகன் உயிர் தப்பினர்
டயர் வெடித்து கவிழ்ந்த கார் தாய், மகன் உயிர் தப்பினர்
ADDED : மே 24, 2024 12:15 AM

கோட்டை, மயிலாப்பூர், மந்தைவெளியைச் சேர்ந்தவர் ரமணஹரன்,19; கல்லுாரி மாணவர். இவரது தாய் கல்யாணி,42. இருவரும் 'ஹூண்டாய் கிரேட்டா' காரில் திருவண்ணாமலைக்கு சென்று, நேற்று அதிகாலை வீடு திரும்பினர்.
சென்னை தலைமைச் செயலகம் அடுத்த நேப்பியர் பாலம் அருகே கார் வந்த போது, திடீரென டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்திலுள்ள தடுப்புச் சுவரில் மோதி, தலைக்குப்புற கவிழ்ந்தது.
அப்போது, காரிலிருந்த பாதுகாப்பு பலுானால், இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனாலும், கார் கதவுகள் தானாக பூட்டிக்கொண்டதால், வெளியில் வர முடியாமல் தவித்தனர்.
அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, கார் கண்ணாடியை உடைத்து, இருவரையும் மீட்டனர். சிறு காயமடைந்த அவர்களை, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பின், போலீசார் அங்கிருந்த காரை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து, பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.