/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அன்னை அஞ்சுகம் பூங்கா பராமரிப்பின்றி மோசம்
/
அன்னை அஞ்சுகம் பூங்கா பராமரிப்பின்றி மோசம்
ADDED : மே 06, 2024 01:01 AM
செம்பாக்கம்,:தாம்பரம் மாநகராட்சியில் 100க்கும் அதிகமாக பூங்காக்கள் உள்ளன. இதில், 30க்கும் மேற்பட்ட பூங்காக்கள், மத்திய அரசின் 'அம்ருத்' திட்ட நிதியிலும், மற்ற பூங்காக்கள் பொது மற்றும் சி.எம்.டி.ஏ., நிதியிலும் சீரமைக்கப்பட்டன.
நிர்வாகத்தின் அலட்சியத்தால், இந்த பூங்காக்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. ஒவ்வொரு பூங்காவிலும், விளையாட்டு உபகரணங்கள், நீரூற்று, அலங்கார மின் விளக்குகள், நடைபாதை உள்ளிட்டவை சீரழிந்து விட்டன; பூச்செடிகள் கருகிவிட்டன.
இதில், செம்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகர் பூங்கா பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது.
கஞ்சா மற்றும் குடிமகன்களின் புகலிடமாக மாறிவிட்டது. இதனால், இப்பூங்காவை பயன்படுத்த முதியவர்கள், பெண்கள் அச்சப்படுகின்றனர்.
இது குறித்து, பல முறை புகார் தெரிவித்தும், மாநகராட்சி அதிகாரிகள் எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.