/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை பணி ஓராண்டாக இழுவை ஜல்லியால் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலை பணி ஓராண்டாக இழுவை ஜல்லியால் வாகன ஓட்டிகள் அவதி
சாலை பணி ஓராண்டாக இழுவை ஜல்லியால் வாகன ஓட்டிகள் அவதி
சாலை பணி ஓராண்டாக இழுவை ஜல்லியால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 30, 2024 12:17 AM

ஆவடி, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டில், கோவில் பதாகை உள்ளது. இங்குள்ள ராஜிவ் காந்தி நகரில், ஒன்று முதல் 10 தெருக்கள் உள்ளன. அதில், 2,000 வீடுகள் உள்ளன. இங்குள்ள ராஜிவ் காந்தி நகர் 1வது மற்றும் 4வது தெரு சாலை மிக மோசமாகி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இந்த நிலையில், ஓராண்டுக்கு முன் மேற்கூறிய தெருவில் சாலை பணிக்காக, பெயர்த்து எடுத்து ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், இதுவரை சாலை அமைக்கப்படவில்லை.
பல இடங்களில் ஜல்லிகள் இருந்த இடம் தெரியாமல் போய் உள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அதேபோல், பிருந்தாவன் நகர் 2வது தெருவில் ஓராண்டுக்கு முன் ஜல்லி கொட்டியும், இதுவரை சாலை அமைக்கப்படவில்லை.
இது குறித்து, பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துஉள்ளது.