/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரு வாரமாக சிதறி கிடக்கும் ஜல்லி ஓ.எம்.ஆரில் வாகன ஓட்டிகளுக்கு காயம்
/
ஒரு வாரமாக சிதறி கிடக்கும் ஜல்லி ஓ.எம்.ஆரில் வாகன ஓட்டிகளுக்கு காயம்
ஒரு வாரமாக சிதறி கிடக்கும் ஜல்லி ஓ.எம்.ஆரில் வாகன ஓட்டிகளுக்கு காயம்
ஒரு வாரமாக சிதறி கிடக்கும் ஜல்லி ஓ.எம்.ஆரில் வாகன ஓட்டிகளுக்கு காயம்
ADDED : ஜூலை 27, 2024 12:44 AM

சோழிங்கநல்லுார்,ஓ.எம்.ஆர்., குமரன் நகர் சந்திப்பில் இருந்து நுாக்கம்பாளையம் நோக்கி செல்லும் சாலை, 80 அடி அகலம் உடையது. மெட்ரோ ரயில் பணியால், இந்த சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால், இரு வழியில் செல்ல வேண்டிய வாகனங்கள், ஒரேவழியில் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், குமரன்நகர் சந்திப்பில் இருந்து பெரும்பாக்கத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது. இப்பணிக்காக இரவில் பள்ளம் தோண்டிய மண், ஜல்லிக்கற்கள், சாலையில் சிதறி கிடக்கின்றன. இதில், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி தடுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
மெட்ரோ ரயில் பணிக்காக தெருவிளக்குகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இரவில் இருட்டாக இருப்பதால், ஜல்லி கிடப்பது தெரியாமல் வளைந்து செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
ஒரு வாரம் ஆகியும், ஜல்லி, மண்ணை அகற்றி, சாலையை சுத்தம் செய்யவில்லை. வாகன ஓட்டிகள் கேட்டால், மாநகராட்சியின் துாய்மை பணி ஊழியர்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும் என, ஒப்பந்த நிறுவனம் அலட்சியமாக பதில் கூறி உள்ளது. உயர் அதிகாரிகள் தலையிட்டு, விபத்து ஏற்படாத வகையில், சாலையை சுத்தம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.