/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாகனங்களில் கல் வீச்சு பீதியடைந்த வாகன ஓட்டிகள்
/
வாகனங்களில் கல் வீச்சு பீதியடைந்த வாகன ஓட்டிகள்
ADDED : மார் 09, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, அண்ணா சாலையில் நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் ஒருவர் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார். இதில், இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஆட்டோவின் கண்ணாடி உடைந்தது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அண்ணாசாலை போலீசார் மதுபோதை ஆசாமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 29, என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இச்சம்பவத்தால் அண்ணாசாலையில் நேற்று முன்தினம் இரவு சலசலப்பு ஏற்பட்டது.