/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ம.பி. குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது
/
ம.பி. குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது
ADDED : மார் 01, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னைமத்திய பிரதேசம் மாநிலம், இந்துாரை சேர்ந்தவர்நாகர்ஜுனா ரெட்டி, 40. இவர் மீது பணமோசடிஉள்ளிட்ட வழக்கு தொடர்பாக, அம்மாநில போலீசார் தேடி வந்தனர்.
தேடப்படும் குற்றவாளியாக இந்துார் போலீசார் அறிவித்தனர். இந்த விபரம் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.இதற்கிடையே, நேற்று அதிகாலை சென்னையில் இருந்து துபாய்க்கு விமானத்தில் செல்ல நாகர்ஜுனா ரெட்டி வந்திருந்தார்.
அவரது ஆவணங்களை சரிபார்த்தபோது, தேடப்படும் குற்றவாளி நாகர்ஜுனா ரெட்டி என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து, சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்துார் போலீசுக்குதகவல் தெரிவிக்கப்பட்டது.