/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேருந்து துாய்மை பணியில் மெத்தனம் எம்.டி.சி., அதிகாரிக்கு ரூ.3,200 அபராதம்
/
பேருந்து துாய்மை பணியில் மெத்தனம் எம்.டி.சி., அதிகாரிக்கு ரூ.3,200 அபராதம்
பேருந்து துாய்மை பணியில் மெத்தனம் எம்.டி.சி., அதிகாரிக்கு ரூ.3,200 அபராதம்
பேருந்து துாய்மை பணியில் மெத்தனம் எம்.டி.சி., அதிகாரிக்கு ரூ.3,200 அபராதம்
ADDED : மே 07, 2024 11:57 PM
சென்னை, சென்னை, புறநகரில் தினமும் 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரின் எல்லை விரிவடைந்து வருவதால், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கோவளம், மாமல்லபுரம், எண்ணுார், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கு, மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அனைத்து பழுதுகளும் முழுமையாக களையப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசு அனைத்து பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி சரிசெய்யவேண்டும் என, 26ம் தேதி, மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மாதவரம் பணிமனைக்கு உட்பட்ட பேருந்துகளை, அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த பேருந்துகள் விதிமுறைப்படி துாய்மை பணிக்கு உட்படுத்தப்படவில்லை என புகார் எழுந்தது.
இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2ம் தேதி மாநகர போக்குவரத்து கழகம் இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், மாதவரம் பணிமனையில் கடந்த ஏப்., 5, 6ம் தேதிகளில் பேருந்துகள் வழித்தடத்திற்கு செல்வதற்கு முன்பாக உட்புறம் பிரஸ் செய்தும், வெளிப்புறம் சோப் நீரால் சுத்தம் செய்தும் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தினசரி தகவல் அளிக்கப்பட்டும், பேருந்துகளில் இதை மேற்கொள்ளாமல், வழித்தடத்தில் பேருந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால், சம்பந்தப்பட்ட பணிமனையைச் சேர்ந்த போக்குவரத்து உதவி பொறியாளர் மீது ஒழுங்கீனம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பேருந்துக்கு 100 ரூபாய் வீதம் 32 பேருந்துகளுக்கு 3,200 ரூபாய் அபராதம் விதித்து, சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிடப்படுகிறது.
மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
பயணியருக்கு சீரான பேருந்து வசதியை வழங்குவதில், நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பேருந்தில் துாய்மை பணி மெத்தனமாக இருந்ததால், அந்த கிளை அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பராமரிப்பு பணியில் மெத்தனம், பயணியரிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வது போன்ற புகார்கள் மீதும், தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

