/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து 1 மாத குழந்தை மர்ம மரணம்
/
மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து 1 மாத குழந்தை மர்ம மரணம்
மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து 1 மாத குழந்தை மர்ம மரணம்
மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து 1 மாத குழந்தை மர்ம மரணம்
ADDED : ஜூன் 28, 2024 12:30 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, கே.எம்.கார்டன் ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் அஜித்குமார், 27. இவரது மனைவி திவ்யா. திருமணமாகி ஓராண்டிற்கு மேலாகிறது.
இவர்களுக்கு கடந்த மே, 21ம் தேதி, அரசு மகப்பேறு மருத்துவமனையில், பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரன்சிகா என பெயர் வைத்தனர்.
பிரசவம் முடிந்து, புளியந்தோப்பில் உள்ள கே.எம்.கார்டன் முதல் தெருவிலுள்ள அம்மா வீட்டிற்கு திவ்யா வந்துள்ளார்.
கடந்த 25ம் தேதி திவ்யா, தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில், குழந்தை வாந்தி எடுத்துள்ளது. உடனே, திருவேங்கடசாமி தெருவிலுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு, குழந்தையை கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் சோதித்து, குழந்தை நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து துாங்க வைத்துள்ளார்.
காலை 5:00 மணியளவில் குழந்தையை பார்த்த போது, மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததுடன், குழந்தை பேச்சு மூச்சில்லாமல் இருந்துள்ளது.
உடனே, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது குழந்தையின் உடல், பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை தகவலை தொடர்ந்து, குழந்தையின் தந்தை அஜித்குமார், மர்மமான முறையில் குழந்தை இறந்தது குறித்து புகார் அளித்துள்ளார்.

