நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த கவரப்பாளையம், சிரஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் பிரபு, 41. குழந்தைகள் நல சமூக பாதுகாப்பில் வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள், 14; தனியார் உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த ஒன்பது மாதங்களாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 10ம் தேதி மதியம், வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி, அதன்பின் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், நேற்று காலை பெரியபாளையம் கோவில் அருகே நின்ற சிறுமியை மீட்டனர்.

