நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கானத்துார், பல்லாவரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் செபி ஆண்டனி, 17. இவர், 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். நேற்று, பனையூர், சீ ஷெல் அவென்யூ கடற்கரைக்கு, தன் வகுப்பு தோழர்களுடன் சென்றார்.
அனைவரும், கடலில் இறங்கி குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி, செபி ஆண்டனிகடலில் இழுத்து செல்லப்பட்டார். மீனவர்கள் உதவியுடன் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
பனையூர் போலீசார், மாணவனை தேடுகின்றனர்.