/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீண்டும் காமராஜர் பெயர் நாடார் சங்கம் கோரிக்கை
/
மீண்டும் காமராஜர் பெயர் நாடார் சங்கம் கோரிக்கை
ADDED : மார் 08, 2025 12:38 AM
சென்னை,
திருத்தணி காய்கனி சந்தைக்கு, மீண்டும் காமராஜர் பெயரை வைக்க வேண்டும் என, தமிழக நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ம.பொ.சி., சாலையில், 60 ஆண்டுகளுக்கு மேலாக, முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரில், காய் கனி சந்தை செயல்பட்டு வந்தது. ஆனால், புதுப்பிக்கப்பட்ட இந்த சந்தைக்கு, கருணாநிதி நுாற்றாண்டு காய்கனி சந்தை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதிலும் வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு செய்துள்ள இந்த தவறை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் சரி செய்ய வேண்டும். திருத்தணி காய்கனி சந்தைக்கு மீண்டும் காமராஜர் பெயரை வைக்க வேண்டும்.
இவ்வாறு முத்துரமேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.