/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நங்கநல்லுார் மூத்த குடிமக்கள் விழிப்புணர்வு நடைபயணம்
/
நங்கநல்லுார் மூத்த குடிமக்கள் விழிப்புணர்வு நடைபயணம்
நங்கநல்லுார் மூத்த குடிமக்கள் விழிப்புணர்வு நடைபயணம்
நங்கநல்லுார் மூத்த குடிமக்கள் விழிப்புணர்வு நடைபயணம்
ADDED : பிப் 25, 2025 02:33 AM

நங்கநல்லுார்,நங்கநல்லுார் மூத்த குடிமக்கள் மன்றம் மற்றும் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் திஹா கிளினிக் இணைந்து, 'நடங்கநல்லுார்' என்ற விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்பட்டது.
இதில், 300க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பங்கேற்று, இரண்டு கி.மீ., துாரம் நடந்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு நடைபயணத்தை மண்டல குழு தலைவர் சந்திரன் துவக்கி வைத்தார். திஹா அறக்கட்டளையின் அறங்காவலர் ஸ்ரீனிவாச கோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மூத்த குடிமக்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராமாராவ் கூறியதாவது:
தினமும் காலையில், நுாற்றுக்கணக்கான மூத்த குடிமக்கள் உற்சாகமாக நடைபயிற்சி செய்து வருகின்றனர்.
முதியோருக்கான உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, நாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.