/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ, அமரர் ஊர்திக்கு தீ வைத்த போதை நபர் கைது
/
ஆட்டோ, அமரர் ஊர்திக்கு தீ வைத்த போதை நபர் கைது
ADDED : ஆக 07, 2024 12:40 AM
ஓட்டேரி ஓட்டேரி, பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய், 22; ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று அதிகாலை, ஓட்டேரி வெங்கட்டம்மாள் சமாதி தெருவில், ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அதன் அருகில் அமரர் ஊர்தி இருந்துள்ளது.
இந்நிலையில், இரு வாகனங்களிலும் திடீரென தீப்பற்றி எரிந்தன. தீ மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தன.
அங்கிருந்தோர் அளித்த தகவலின்படி, கீழ்ப்பாக்கம் நிலையத்திலிருந்து வந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இதில், இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிந்து, குடிபோதையில் சம்பவத்தில் ஈடுபட்ட புரசைவாக்கம், பொன்னன் நகரைச் சேர்ந்த கோகுல்நாத், 22, என்பவரை, நேற்று கைது செய்தனர்.