/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே நேருவும், இந்திராவும் கருதவில்லை: நிர்மலா சீதாராமன்
/
கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே நேருவும், இந்திராவும் கருதவில்லை: நிர்மலா சீதாராமன்
கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே நேருவும், இந்திராவும் கருதவில்லை: நிர்மலா சீதாராமன்
கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே நேருவும், இந்திராவும் கருதவில்லை: நிர்மலா சீதாராமன்
UPDATED : ஏப் 02, 2024 02:11 PM
ADDED : ஏப் 02, 2024 12:33 PM

சென்னை: கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே நேருவும், இந்திராவும் கருதவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த விக்சித் பாரத் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
கோவையில் இருந்து பல்வேறு தொழில்துறை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அயல் நாடு செல்லும் இந்திய செவிலியர்களுக்கு நல்ல வரவேற்பும், வாய்ப்பும் கிடைத்துள்ளது. அயல்நாடு செல்லும் செவிலியர்களுக்கு அந்நாட்டு மொழிகளை மத்திய அரசு கற்றுக் கொடுக்கிறது. மக்களுடைய முயற்சிக்கு ஏற்ப, அரசும் செயல்பட்டால் அதிக பலன் கிடைக்கும். அது தான் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.
கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.,ஆட்சியில் நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை பார்த்து ஆச்சரியப்படுகிறது. கோவிட் காலத்தில் இந்தியா சீக்கிரமாக மீண்டு வந்தது. 2047ம் ஆண்டு இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்தை பற்றியும், அந்த நிறுவனங்கள் இருக்கக்கூடிய இடத்தை பற்றியும் ஆராய்ந்த பின், முதலீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தாரா?
பின்னர் பல்லாவரத்தில் நிருபர்கள் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பாஜ., பேசுவதாக கூற முடியாது. கச்சத்தீவு இந்தியாவின் இறையாண்மை தொடர்புடையது. திமுகவுக்கு தெரியாமல் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக, 50 ஆண்டுகளாக பொய் பிரசாரம் நடந்து வந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கச்சத்தீவு வழங்கப்பட்ட போது, கூட்டணியில் இருந்த கட்சிகள், தற்போதும் கூட்டணியில் உள்ளது.
முகூர்த்தம் தேவையில்லை
கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே நேருவும், இந்திராவும் கருதவில்லை. ஒரு நாட்டின் ஒரு பகுதியை இழந்தது குறித்து பேச முகூர்த்தம் தேவையில்லை. கச்சத்தீவை பாறை என்று இந்திரா குறிப்பிட்டார்.
தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை கூறினால், போட்டியிடுவேன். கச்சத்தீவு குறித்து நீதிமன்றத்தி்ல இரு ரிட் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் திமுகவுக்கு வந்த 90 சதவீதம் பணம் ஒரு நபரிடம் இருந்து வந்துள்ளது. 1967க்குப் பிறகு காங்கிரஸ் என்னும் தேசிய கட்சியால் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை.
கண்ணீர் வருகிறது
தமிழகத்தில் மிக்ஜாம் புயல், வெள்ளப் பாதிப்பு வந்தவுடன், ரூ.950 கோடி தமிழக பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டது. சென்னைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி முன்கூட்டியே வழங்கப்பட்டது. ரூ. 5 ஆயிரம் கோடி எப்படி செலவிடப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு கூற வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்திருப்பதால் கண்ணீர் வருகிறது. ராமநாதபுரத்தில் போதைப்பொருட்கள் பிடிக்கப்பட்டதை குஜராத்தில் இருந்து வந்தது என்று கூற முடியுமா?. மீண்டும் மீண்டும் குஜராத்தை குற்றம் சாட்டுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

