/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெமிலிச்சேரி ஊராட்சி பிரச்னை அதிகாரிகள் சமரச முயற்சி
/
நெமிலிச்சேரி ஊராட்சி பிரச்னை அதிகாரிகள் சமரச முயற்சி
நெமிலிச்சேரி ஊராட்சி பிரச்னை அதிகாரிகள் சமரச முயற்சி
நெமிலிச்சேரி ஊராட்சி பிரச்னை அதிகாரிகள் சமரச முயற்சி
ADDED : ஜூன் 26, 2024 12:37 AM
நெமிலிச்சேரி, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நெமிலிச்சேரி ஊராட்சி. 12,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு, ம.தி.மு.க.,--- 2, அ.தி.மு.க., - 2 , தி.மு.க., --4 மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சி தலைவராக, தி.மு.க.,வை சேர்ந்த தமிழ்செல்வி உள்ளார். பொது பிரச்னையில் அவரது நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்துள்ள பொதுமக்கள், ஒவ்வொரு பிரச்னைக்கும் வீதியில் இறங்கி போராடும் நிலை உள்ளது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி, 60 நாட்களுக்குள் ஊராட்சி மன்ற கூட்டம் நடத்த வேண்டும். ஆனால், நெமிலிச்சேரியில் முறையாக கூட்டம் நடத்தப்படுவதில்லை.
எட்டு மாதங்களுக்கு பின், கடந்த 20 ம் தேதி நடந்த கூட்டமும், உறுப்பினர்கள் வராததால் ரத்தானது.
இந்நிலையில், நெமிலிச்சேரியில் நடக்கும் பிரச்னைகளை விரிவாக எழுதி, நெமிலிச்சேரி ஊராட்சியின் ஒன்பது வார்டு உறுப்பினர்களும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த பிப்., 20 ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, நேற்று காலை பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நெமிலிச்சேரி ஊராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வார்டு உறுப்பினர்கள் மட்டுமின்றி பகுதிவாசிகளும் பங்கேற்றனர்.
பல்வேறு பிரச்னைகள் குறித்து அதிகாரிகள் விவாதித்த நிலையில், எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது. இதனால், பகுதிவாசிகள் மேலும் அதிருப்தியடைந்து உள்ளனர்.