/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொட்டை மாடியில் இருந்து விழுந்து நேபாள வாலிபர் பலி
/
மொட்டை மாடியில் இருந்து விழுந்து நேபாள வாலிபர் பலி
மொட்டை மாடியில் இருந்து விழுந்து நேபாள வாலிபர் பலி
மொட்டை மாடியில் இருந்து விழுந்து நேபாள வாலிபர் பலி
ADDED : ஆக 21, 2024 12:23 AM
சேலையூர், நேபாள நாட்டின், மலாஹெட்டியை சேர்ந்தவர் ரமேஷ் நபாலி, 25. சேலையூரை அடுத்த மாடம்பாக்கம், ஏ.எல்.எஸ்., நகரில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு மாதமாக மனைவி சீதா மற்றும் குழந்தைகளுடன் தங்கி, காவலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, உறவினருடன் சேர்ந்து மொட்டை மாடியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. உறவினர் கிளம்பி சென்ற பிறகு, மொட்டை மாடியில் ரமேஷ் நபாலி மட்டும் துாங்கிக்கொண்டிருந்தார். மனைவி சீதா, குழந்தைகளுடன், கீழே இருந்த அறையில் துாங்கினார். அப்போது, திடீரென அலறல் சத்தம் கேட்டு, சீதா மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, கீழேயுள்ள காலி இடத்தில் ரமேஷ் நபாலி விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன், 108 ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டது.
அதில் வந்த மருத்துவ பணியாளர்கள், ரமேஷ் நபாலியை பரிசோதனை செய்து, இறந்து போனதாக உறுதி செய்தனர்.
சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.