/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெட்ரோல் திருடர்களுக்கு வலை வீச்சு
/
பெட்ரோல் திருடர்களுக்கு வலை வீச்சு
ADDED : ஜூன் 26, 2024 12:23 AM
திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி பகுதியில் பெரும்பாலான குடியிருப்புவாசிகள், இரவு நேரங்களில் தங்களது வாகனங்களை அவரவர் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கின்றனர்.
அந்த வாகனங்களில் இருந்து மர்மநபர்கள் பெட்ரோல் திருடி வருகின்றனர். சிலர் பெட்ரோல் தானே என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு மர்மநபர்கள் தொடர்ந்து கை வரிசை காட்டி வருகின்றனர். இதுகுறித்து சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
பொதுவாக தற்போது எந்த பெட்ரோல் பங்கிலும் கேன்களில் பெட்ரோல் கொடுப்பதில்லை. இரவு நேரங்களில் பெட்ரோலுடன் சுற்றுபவர்களை கண்காணித்து பிடித்தால், உண்மை தெரியவரும். இரவு நேரங்களில் போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.