/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்ஜினியரை தாக்கிய போதை நபருக்கு வலை
/
இன்ஜினியரை தாக்கிய போதை நபருக்கு வலை
ADDED : ஜூலை 02, 2024 01:13 AM
மாம்பலம், கே.கே.நகர் சங்கர ஈஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் விஷால், 29; சிவில் இன்ஜினியர்.
இவர், நேற்று முன்தினம் இரவு, தன் நண்பரான, கே.கே.நகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 29, என்பவருடன், கார்ப்பரேஷன் காலனி இரண்டாவது தெருவிலுள்ள உறவினர் வீட்டிற்கு, காரில் சென்றார்.
தி.நகர் முத்துரங்கன் சாலையில் காரை நிறுத்திய போது, அங்கு மதுபோதையில் வந்த ராதாகிருஷ்ணன் என்பவர், அங்கு காரை நிறுத்தக் கூடாது என தகராறு செய்துள்ளார்.
அத்துடன் விஷால், மணிகண்டனை தாக்கியுள்ளார். இதில், மணிகண்டனுக்கு மயக்கம் ஏற்பட்டு, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து புகாரின்படி, மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.