ADDED : ஆக 29, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,
திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் சேது, 19; ஆட்டோ மெக்கானிக். இரண்டாவது சகோதரி தாயிரா என்பவர், தன் கணவர் வெற்றியுடன் சண்டையிட்டு, காலடிப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு, ஒரு வாரத்திற்கு முன் வந்துள்ளார்.
பின், வெற்றி வந்து குடும்ப நடத்த அழைத்த போது, தாயிரா செல்ல மறுத்துள்ளார். இதேபோல் நேற்று, தாயிராவை பார்க்க மதுபோதையில் வந்த வெற்றி, குடும்பம் நடத்த வருமாறு அழைத்து, தகராறு செய்துள்ளார். அங்கிருந்த தாயிராவின் சகோதரர் சேது தட்டிக் கேட்ட போது, கத்தியால் அவரது காலில் வெட்டி விட்டு தப்பினார்.
படுகாயமடைந்த சேதுவை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

