/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோட்டை ரயில் நிலையத்தில் புது நடைமேம்பாலம்
/
கோட்டை ரயில் நிலையத்தில் புது நடைமேம்பாலம்
ADDED : ஆக 21, 2024 12:47 AM

சென்னை, கோட்டை ரயில் நிலையத்தில் 1.50 கோடி ரூபாய் செலவில், புது நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பருக்குள் இந்த பணிகளை முடிக்க, சென்னை ரயில் கோட்டம் திட்டமிட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் உள்ள கோட்டை ரயில் நிலையம், முக்கியத்துவம் வாய்ந்தது. அருகே, தலைமை செயலகம், உயர் நீதிமன்றம், பிராட்வே பேருந்து நிலையம் இருப்பதால், அலுவலக நேரங்களில் மட்டுமல்லாமல், எப்போதும் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.
ஏற்கனவே உள்ள நடைமேம்பாலம் பழமையானது என்பதால், புதிய பாலத்தை அமைக்க, சென்னை ரயில் கோட்டம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
பயணியரின் வருகை அதிகமாக இருக்கும் ரயில் நிலையங்களை தேர்வு செய்து, படிப்படியாக மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கோட்டை ரயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகளை துவக்கி உள்ளோம். இது, பழைய மேம்பாலத்தை விட, பெரிதாக இருக்கும்.
பயணியர் வசதியாக செல்ல முடியும். 1.50 கோடி ரூபாயில் நடக்கும் இந்த மேம்பால பணி, வரும் டிசம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

