/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரிக்கெட் விளையாட சென்ற புது மாப்பிள்ளை திடீர் பலி
/
கிரிக்கெட் விளையாட சென்ற புது மாப்பிள்ளை திடீர் பலி
கிரிக்கெட் விளையாட சென்ற புது மாப்பிள்ளை திடீர் பலி
கிரிக்கெட் விளையாட சென்ற புது மாப்பிள்ளை திடீர் பலி
ADDED : மார் 25, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கார்த்திக், 30; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஐஸ்வர்யா, 27. இவர்களுக்கு, ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.
கார்த்திக், சனிக்கிழமை இரவு பணி முடிந்து, நேற்று காலை சோமங்கலம் அடுத்த தர்காஸ்ட் பகுதியில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளார். இரவு முழுதும் துாங்காமல் இருந்த நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியதால், திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
நண்பர்கள் அவரை மீட்டு, தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.