தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இ.பி.எப்., புதிய திட்டம் வரும் 28ல் சிறப்பு முகாம்

இ.பி.எப்., புதிய திட்டம் வரும் 28ல் சிறப்பு முகாம்

இ.பி.எப்., புதிய திட்டம் வரும் 28ல் சிறப்பு முகாம்


ADDED : செப் 25, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இ.பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் புதிய திட்டங்கள், சீர்திருத்தங்கள் மற்றும் சேவைகள் குறித்து தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள, வரும் 28ம் தேதி, பெரம்பூரில் சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, சென்னை மண்டல ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இ.பி.எப்., தொடர்பான சந்தேகங்கள், புகார்களுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை பெரம்பூர், குக்ஸ் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ., கிளை அலுவலகத்தில் வரும் 28ம் தேதி, சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. மேலும், தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இயங்காத இ.பி.எப்., கணக்குகள், பணியாளர் சேர்க்கை திட்டம், இ.பி.எப்., விலக்கு அளித்தல், விலக்கை ரத்து செய்தல், கடந்த கால சேர்வுகளை வரவு வைத்தல் உள்ளிட்டவை குறித்தும் இந்த முகாமில் விளக்கம் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us