பேனர் பாக்ஸ்/ தி.மு.க., ஆட்சியில் முடிந்த திட்டங்களை முடக்குவதா?
பேனர் பாக்ஸ்/ தி.மு.க., ஆட்சியில் முடிந்த திட்டங்களை முடக்குவதா?
ADDED : செப் 25, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
‘‘தமிழக சட்டசபை வரலாற்று சிறப்பு மிக்கது. பல்வேறு தலைவர்கள் முதல்வராக இருந்துள்ளனர். மிசா காலத்தில் கைதாகி சிறை தண்டனை பெற்ற தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் அரசியல் பயணத்தையும், தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில், த.வெ.க., அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
முதல்வரின் உடல்மொழி, செய்கைகள் மற்றும் சட்டசபை வெளிப்படும் அணுகுமுறைகள் சபையின் மாண்பை குலைக்கும் வகையில் இருப்பது கண்டனத்திற்கு உரியது.
தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்ட பணிகள் முடிந்தும், ஆட்சி மாற்றத்தால் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளன. அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
– பிரியா,
மாநகராட்சி மேயர்.
