/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செய்திகள் சில வரிகளில்... ஆசிரியர்கள் கைது
/
செய்திகள் சில வரிகளில்... ஆசிரியர்கள் கைது
ADDED : செப் 06, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, செப். 6-
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், சென்னை மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும், தலா மூன்று தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதலை திரும்ப பெற வேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆக., மாத ஊதியத்தை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.