/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னை - 3 மின் நிலையம் துவங்கி ஓராண்டாகியும் வணிக உற்பத்தி இல்லை
/
வடசென்னை - 3 மின் நிலையம் துவங்கி ஓராண்டாகியும் வணிக உற்பத்தி இல்லை
வடசென்னை - 3 மின் நிலையம் துவங்கி ஓராண்டாகியும் வணிக உற்பத்தி இல்லை
வடசென்னை - 3 மின் நிலையம் துவங்கி ஓராண்டாகியும் வணிக உற்பத்தி இல்லை
ADDED : மார் 08, 2025 12:08 AM
சென்னை :திருவள்ளூர் மாவட்டம், வட சென்னை - 3 அனல்மின் நிலையத்தில் சோதனை மின் உற்பத்தி துவங்கப்பட்டு, நேற்றுடன் ஓராண்டு முடிந்த நிலையில், இன்னும் வணிக பயன்பாட்டிற்கு வரவில்லை.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், 10,158 கோடி ரூபாயில், 800 மெகா வாட் திறனில், வட சென்னை - 3 அனல்மின் நிலையத்தை, மின் வாரியம் அமைத்துள்ளது. இதன் கட்டுமான பணிகள், 2016ல் துவங்கின. பணிகள் முடிந்து, 2024 மார்ச், 7ல் சோதனை ரீதியான மின் உற்பத்தி துவக்கப்பட்டது.
சோதனை மின் உற்பத்தி துவங்கிய நிலையில், முழு திறனில், 72 மணி நேரம் தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அதன்பின், வணிக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்ததாக அறிவிக்கப்படும்.
வட சென்னை - 3 மின் நிலையத்தில் சோதனை உற்பத்தி துவங்கிய நிலையில், தினமும் சராசரியாக, 500 - 600 மெகா வாட் மின் உற்பத்தி செய்த நிலையில், ஜூன், 27ல் முழு திறனில் மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின், மின் உற்பத்தி குறைக்கப்பட்டது.
மின் நிலையத்தில் சோதனை மின் உற்பத்தி துவங்கி, ஓராண்டு முடிந்த நிலையில், இன்னும் வணிக பயன்பாட்டிற்கு வரவில்லை.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் நிலையத்தில் சோதனை மின் உற்பத்தி துவங்கியபின், பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதை சரிசெய்ய வேண்டியுள்ளதால், வணிக மின் உற்பத்தி துவங்க தாமதமாகிறது.
அடுத்த மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து, மே மாதம் வணிக மின் உற்பத்தி துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.