/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வட சென்னை -மின் உற்பத்தி 800 மெகா வாட் எட்டியது
/
வட சென்னை -மின் உற்பத்தி 800 மெகா வாட் எட்டியது
ADDED : ஜூன் 29, 2024 12:18 AM
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், 800 மெகா வாட் திறனில் வட சென்னை - 3 அனல் மின் நிலையத்தை, மின் வாரியம் அமைத்துள்ளது. திட்ட செலவு, 10,158 கோடி ரூபாய்.
ஆரம்பத்தில் எரி பொருளாக அதிவேக டீசலை பயன்படுத்தி, 200 - 250 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
பின், டீசல் குறைக்கப்பட்டு, நிலக்கரி அதிகப்படுத்தப்பட்டது. அதற்கு ஏற்ப அதிகபட்சமாக, 670 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வட சென்னை - 3 மின் நிலையத்தில், உற்பத்தி துவங்கிய நிலையில், இம்மாதம், 27ம் தேதி, 800 மெகா வாட்டை எட்டியது. பின், மின் உற்பத்தி சோதனைக்காக குறைக்கப்பட்டது.
தற்போது, 500 - 550 மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது. விரைவில் தொடர்ந்து முழு திறனான, 800 மெகா வாட் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால், தனியாரிடம் மின்சாரம் வாங்குவது குறைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.

