/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரியத்தில் பணி வாரிசுதாரர்கள் ஏக்கம்
/
குடிநீர் வாரியத்தில் பணி வாரிசுதாரர்கள் ஏக்கம்
ADDED : செப் 04, 2024 12:52 AM
சென்னை:சென்னை குடிநீர் வாரியத்தில், 2003 முதல் 2015ம் ஆண்டு வரை பணியில் இருந்து இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு தகுதி அடிப்படையில், 2017ல் 388 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இதில், 66 பேர் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் களப்பணியாளர்களாக தொடர்கின்றனர். இவர்களில், 28 பேர் பட்டதாரிகள்.
மேலும், டிப்ளமோ கணினி பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களை, இளநிலை உதவியாளர்களாக நியமிக்க வேண்டும் என, 2022ம் ஆண்டு, தலைமை செயலர் உத்தரவு பிறப்பித்தார். இருந்தும், அவர்களுக்கு பணியிடம் வழங்கவில்லை.
குடிநீர் வாரியத்தில், 250க்கும் மேற்பட்ட இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், தகுதி வாய்ந்த 28 பேருக்கு, இளநிலை உதவியாளர்கள் பதவி வழங்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.