/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிக்கரணையில் விதிமீறிய கட்டடத்திற்கு 'நோட்டீஸ்'
/
பள்ளிக்கரணையில் விதிமீறிய கட்டடத்திற்கு 'நோட்டீஸ்'
பள்ளிக்கரணையில் விதிமீறிய கட்டடத்திற்கு 'நோட்டீஸ்'
பள்ளிக்கரணையில் விதிமீறிய கட்டடத்திற்கு 'நோட்டீஸ்'
ADDED : ஜூலை 02, 2024 12:07 AM
சென்னை, பள்ளிக்கரணையில், விதிகளை மீறி கட்டப்பட்ட தனியார் கட்டடத்திற்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்,'சீல்' வைப்பதற்கான 'நோட்டீஸ்' அளித்துள்ளனர்.
சென்னையில் பல்வேறுபகுதிகளில், விதிமீறல் கட்டடங்கள் பரவலாக அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான புகார்கள் குவிந்தாலும், சி.எம்.டி.ஏ.,அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
இதில் பல்வேறு கட்ட அழுத்தங்கள் வந்த பின், அரிதாக சில கட்டடங்கள் மீது, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருகின்றனர்.
இந்த வகையில், சென்னை தாம்பரம் - வேளச்சேரி சாலையில், பள்ளிக்கரணை பகுதியில் தனியார் ஒருவர், விதிகளை மீறி அடுக்குமாடி கட்டடம் கட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு, இரண்டு 'பிளாக்'குகளாக, 16 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. மேலும், இங்கு பொது மற்றும் வணிக பகுதிகள் கட்டப்பட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளன.
இந்த விதிமீறல்களை சரி செய்யாத நிலையில், சம்பந்தப்பட்ட கட்டட பாகங்களுக்கு ஏன் சீல் வைக்கக் கூடாது என, விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதற்காக, கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.