/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உச்சி வெயில் மண்டைய பொளந்தாலும் சேறும் சகதியும் தான் நுாம்பல் சாலை கதி

ADDED : ஆக 19, 2024 02:39 AM

திருவேற்காடு,:திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட நுாம்பல் பிரதான சாலை, 1.5 கி.மீ., துாரம் உடையது. இங்கு, பல்வேறு தொழில் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன
இந்த சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்காமல் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் இந்த சாலையில் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.
இங்கு 10 நாட்களுக்கு முன் மழை பெய்த நிலையில், இன்று வரை சாலையில் வெள்ளம் வடியாமல், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
பெரிய பள்ளங்களுடன் சேறும் சகதியுமாக வயல்வெளி போன்று சாலை காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள், விபத்து அபாயத்திலேயே இச்சாலையில் பயணிக்கின்றனர்.
பாதசாரிகள் நடப்பதற்கு ஏதுவாக போட்டு வைத்துள்ள பெரிய கற்கள், இரவு வேளைகளில் விபத்து ஏற்படுத்தும் நிலைமையில் உள்ளன. பருவ மழை துவங்கினால் நிலைமை மேலும் மோசமாகும்.
எனவே, மழைக்காலம் துவங்கும் முன், சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.