ADDED : ஜூலை 14, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக, அடையாறில் பிரதான கழிவுநீர் குழாய் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதனால், 16, 17ம் தேதிகளில், தேனாம்பேட்டை மண்டலம் வடக்கு, தெற்கு மயிலாப்பூர் மற்றும் ஐஸ் ஹவுஸ் ஆகிய கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது. மேலும், அடையாறு மண்டலம், பட்டினம்பாக்கம், ராஜா அண்ணாமலை புரம், பக்தவச்சலம் நகர், அடையாறு ஆகிய கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.
அப்போது, இயந்திர நுழைவு வாயில் வழியாக கழிவுநீர் வெளியேறினால், தேனாம்பேட்டை மண்டலம் – 81449 30909 மற்றும் அடையாறு மண்டலம் – 81449 30913 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும். உறிஞ்சி லாரிகள் கொண்டு கழிவுநீர் வெளியேற்றப்படும் என, குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
