/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜெம் மருத்துவமனையில் 'ஒபெசிகான்' மாநாடு
/
ஜெம் மருத்துவமனையில் 'ஒபெசிகான்' மாநாடு
ADDED : ஆக 06, 2024 12:48 AM
சென்னை, ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை துறை சார்பில், உடல் பருமனுக்கான 'ஒபெசிகான்' மாநாட்டின் ஏழாவது பதிப்பு, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், கலிபோர்னியாவைச் சேர்ந்த காஸ்ட்ரோ என்டாலஜிஸ்ட் டாக்டர் பழனியப்பன் மாணிக்கம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையைச் சேர்ந்த இதய நோய் நிபுணர் பாலசுப்ரமணியன், ஸ்ட்ரெந்த் அண்டு கண்டிஷனிங் நிபுணர் மற்றும் சர்வதேச 'கெட்டிபெல்' வீராங்கனை தேவிமீனா சுந்தரம், ஜெம் மருத்துவமனை டாக்டர்கள் பிரவீன்ராஜ், சரவணகுமார், மேக்னஸ் ஜெயராஜ் உள்ளிட்டோரின் விளக்கங்கள் இடம் பெற்றன.
நாடு முழுதும் இருந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள், டாக்டர்கள், உளவியல் நிபுணர்கள், மருத்துவ உளவியலாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
இது குறித்து, ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு கூறுகையில், ''உடல் பருமன் உள்ளவர்களில் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இது பெருமைப்பட வேண்டிய புள்ளி விபரமல்ல. உடல் உழைப்பு இல்லாமை மற்றும் இந்தியாவில் அதிகரித்து வரும் மேற்கத்திய உணவு வகைகள் ஆகியவை, இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம்,'' என்றார்.