/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பற்ற நெடுஞ்சாலை மேம்பாலங்கள் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம்
/
பராமரிப்பற்ற நெடுஞ்சாலை மேம்பாலங்கள் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம்
பராமரிப்பற்ற நெடுஞ்சாலை மேம்பாலங்கள் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம்
பராமரிப்பற்ற நெடுஞ்சாலை மேம்பாலங்கள் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஆக 02, 2024 12:45 AM

அண்ணா நகர், திருமங்கலம், அண்ணா நகர் பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறையின் மேம்பாலங்கள் போதிய பராமரிப்பின்றி காட்சி அளிக்கின்றன.
சென்னை மாநகராட்சி சார்பில், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், சென்னையை அழகுபடுத்தும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மேம்பாலங்கள் பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு, அழகுபடுத்தப்படுகின்றன.
அதன்படி, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அரும்பாக்கத்தில் அண்ணா 'ஆர்ச்' மற்றும் திருமங்கலம் பகுதியில், நெடுஞ்சாலைத் துறையின் மேம்பாலங்கள் உள்ளன.
இங்கு, நெடுஞ்சாலைத் துறையுடன், சென்னை மாநகராட்சி இணைந்து பராமரிப்பு மேற்கொண்டு வருகிறது.
இதில், அண்ணா ஆர்ச் மேம்பாலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், சீரமைக்கும் பணிகள் துவங்கின.
அங்குள்ள 48 துாண்களில், 10 லட்சம் ரூபாய் செலவில், சென்னை மாநகராட்சி வண்ணம் பூசுதல் மற்றும் வண்ண விளக்குதல் அமைத்தல் பணிகளை துவக்கியது.
அதன்பின் போதிய நிதி இல்லாததால், பணிகள் அறைகுறையாக விடப்பட்டன. அதேபோல், மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சிறிய அளவில் பூங்கா அமைக்க திட்டப்பணிகள் துவங்கின.
அதற்காக இடங்களை துாய்மைப்படுத்தி, சீரமைப்பு பணிகள் துவங்கின. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், அண்ணா நகர் மண்டலத்தில் செயற்பொறியாளர்கள் மாற்றப்பட்ட பின், அனைத்து பணிகளும் கிடப்பில் போடப்பட்டன.
இரண்டு ஆண்டுகளாகியும் எந்த பணிகளும் துவங்காமல் இருப்பதால், தற்போது அந்த இடங்கள், புதர் மண்டி காட்சியளிக்கின்றன. நெடுஞ்சாலைத் துறையும் இதை கண்டுகொள்வதில்லை. அதேபோல், மேம்பால சுவர்களின் சுவர் பூங்கா அமைக்கப்பட்டது. அவற்றையும் முறையாக பராமரிக்காமல், அலட்சியமாக விட்டுள்ளனர்.
இதேபோல், திருமங்கலம் மேம்பாலத்திலும் சுவர் பூங்கா, மேம்பால தடுப்பில் பூச்செடிகள் வாடியுள்ளன. திருமங்கலத்தில் மெட்ரோ பணிகள் நடப்பதால், பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. எனவே, இரு மேம்பாலங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.