/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
112 ஏக்கரில் மெகா விளையாட்டு நகரம் செம்மஞ்சேரியில் அதிகாரிகள் ஆலோசனை
/
112 ஏக்கரில் மெகா விளையாட்டு நகரம் செம்மஞ்சேரியில் அதிகாரிகள் ஆலோசனை
112 ஏக்கரில் மெகா விளையாட்டு நகரம் செம்மஞ்சேரியில் அதிகாரிகள் ஆலோசனை
112 ஏக்கரில் மெகா விளையாட்டு நகரம் செம்மஞ்சேரியில் அதிகாரிகள் ஆலோசனை
ADDED : மார் 04, 2025 08:44 PM
சென்னை:சென்னையில் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகள் நடத்த மைதானங்கள் உள்ளன.
சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகள், பயிற்சிகள் நடத்த விளையாட்டு நகரம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரியில் தனியார் ஆக்கிரமிப்பில், 12 சர்வே எண்களில் இருந்த, 112 ஏக்கர் பரப்பு அரசு இடம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மீட்கப்பட்டது.
இதில், சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, 112 ஏக்கர் இடம், சில மாதங்களுக்கு முன், வருவாய்த் துறையில் இருந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
விளையாட்டு நகரத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக, நேற்று மாலை, ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலர் காகர்லா உஷா, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர், இதர துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த இடத்தின் அருகில் சதுப்பு நிலம் உள்ளதால், இடம் சரியான கோணத்தில் உள்ளதா, வெள்ள பாதிப்பு ஏற்படுமா, ஓ.எம்.ஆரில் இருந்து விளையாட்டு நகரம் வரை, 1.5 கி.மீ., துாரத்தில், 100 அடி அகல சாலை வசதி, அதற்கான நிலம் கையகப்படுத்துவது குறித்து, ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
ஓரிரு மாதங்களில் பணி துவங்கும் வகையில், கோப்புகள் தயாராகி வருவதாக அதிகாரிகள் கூறினர்.